Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: கன்னியாகுமரி - நாஞ்சில் நாடு - குமரி மாவட்டம் ஒரு சிறப்பு பயணம் - நாகர்கோயில் - Kanyakumari - Kanyakumari Dist- Nanjil Nadu - Nagercoil
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
தமிழகத்திற்கு தெற்கு எல்லையாகத் திகழும் நகரம். இயற்கை அழகுக்கு பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச்...
தமிழகத்திற்கு தெற்கு எல்லையாகத் திகழும் நகரம். இயற்கை அழகுக்கு பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு சொர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக தமிழகத்தின் நெல்லை மாவட்டமும் திகழ்கிறன. அரபிக்கடல், வங்காளவிரிகுடா, இந்தியப் பெருங்கடல் என முக்கடலும் சங்கமிக்கும் இடம் கன்னியாகுமரி. இங்கு காணக் கிடைக்கும் சூரிய உதயமும், அஸ்தமனமும் வண்ணத்திருவிழா. வானம் வாரியிறைக்கும் வர்ண ஜாலம் அது. பல வண்ண மணல் நிரம்பிய குமரி கடற்கரை காணக் காண இன்பமே.

                               திருவள்ளுவர் சிலை
தமிழினம் செழிக்க இரண்டடி குறள் தந்த வள்ளுவருக்கு விவேகானந்தர் பாறையில் எழுப்பப்பட்டுள்ள 133 அடி உயரச் சிலை. இந்த உயரம் 133 அதிகாரங்களை நினைவுபடுத்துகிறது. நவீன கட்டடக் கலையின் அழகையும் திராவிடக் கலை நுட்பங்களையும் உள்ளடக்கி 5000க்கும் மேற்பட்ட சிற்பிகளின் உளியில் பிறந்த அற்புதம். டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட நினைவுச் சின்னம். படகுகள் மூலம் சிலையினைப் பார்வையிடலாம்.
                                                                                            
இந்த சிலை அமைக்கும் பணி 1990, செப்டம்பர் 6 இல் தொடங்கப்பட்டு 2000, சனவரி 1 இல் திறக்கப்பட்டது. உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது. பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.

சிலை குறிப்புகள்
மொத்த சிலையின் உயரம் - 133 அடி
சிலையின் உயரம் - 95 அடி
பீடத்தின் உயரம் - 38 அடி
சிலையின் உருவாக்கம் - 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
சிலையின் மொத்த எடை - 7,000 டன்
சிலையின் எடை - 2,500 டன்
பீடத்தின் எடை - 1,500 டன்
பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்

சிலை அளவுகள்
முக உயரம் - 10 அடி
கொண்டை - 3 அடி
முகத்தின் நீளம் - 3 அடி
தோள்பட்டை அகலம் -30 அடி
கைத்தலம் - 10 அடி
உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி
இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி
கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி

                சுவாமி விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம்
சகோதர, சகோதரிகளே என்ற சொல்லில் உலகைக் கட்டிப் போட்டவர். எழுமின்!விழுமின்! என்ற வார்த்தைகளின் மூலம் இளைய மனங்களில் எழுச்சி தீபம் ஏற்றியவர். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தை நிறுவியவர். குமரிப் பாறையில் விவேகானந்தரின் சிலையும் நினைவு மண்டபமும் எழுப்பப்பட்டு உள்ளது. இங்கு அமைதி தவழும் தியான மண்டபம் இருக்கிறது. படகுகள் மூலம் பாறையை அடைவது ஒரு பரவச அனுபவம்.

                            காமராசர் நினைவாலயம்
எளிய குடும்பத்தில் பிறந்து, முதல்வராக உயர்ந்தவர் பெருந்தலைவர் காமராசர். மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய பள்ளிக் குழந்தைகளின் வாழ்வில் கல்வி விளக்கை ஏற்றியவர் கர்மவீரர். படிக்காத மேதை என்று தமிழக மக்களால் புகழப்பட்ட மக்கள் தலைவர் காமராசரின் நினைவாலயம். இது 2000 அக்டோபர் 2 ஆம் தேதி திறந்து வைக்கபட்டது.

                                 காந்தி மண்டபம்
மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள நினைவாலயம். முக்கடல் சங்கமத்தில் மூழ்கி நீராடுவதற்கு முன் தேசத் தந்தைக்கு இறுதி மரியாதை செல்லுத்துவதற்கு வசதியாக இது அமைக்கப்பட்டுள்ளது. மகாத்மா பிறந்த அக்டோபர் 2 ஆம் நாள் மட்டும் ஒரு குறுகிய துளையின் வழியாக அஸ்தி கலசத்தின் மீது சூரியக் கதிர்கள் விழும்படி அமைக்கப்பட்டுள்ளது. கடலில் கால் நனைக்கும் முன் அகிம்சை அண்ணலை ஞாபகம் கொள்ளுங்கள்.

                              குமரியம்மன் கோயில்
கடலில் நீராடும் துறை அருகே ஓர் அழகிய சித்திரம்போல அமையப் பெற்றிருக்கிறது குமரியம்மன் கோயில். இந்த அம்மனின் பெயருக்குக் காரணம் இருக்கிறது. குமரி அம்மன் சிவனைத் திருமணம் செய்துகொள்ள முடியாத நிலையில் காலம் முழுதும் கன்னியாகவே வாழ ஒரு நோன்பை மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதுவே கன்னியாகுமரி என்று பெயர் வரக்காரணம் என்கிறார்கள். குமரியம்மனின் வைர முக்குத்தியின் ஜொலிப்பை கடலில் இருந்தும் கூடப் பார்க்கலாம் என்று சொல்கிறார்கள்.

                         தூய உபகார மாதா ஆலயம்

சூரிய உதயம், அஸ்தமனம் இவை மட்டுமல்ல குமரி, எவ்வளவோ அற்புதங்கள் இருக்கிறன்றன. பழமை வாய்ந்த தேவாலயங்களில் உபகார மாதா கோயிலும் ஒன்று. இதன் கோபுர உயரம் 153 அடி. இங்குள்ள தங்கச் சிலுவையின் உயரம் 8 அடி உயரமாகும். இந்த அன்னை உங்களுக்கு உபகாரம் செய்வார்.


                             அரசு பழப்பண்ணை
 பழங்கள் செழிப்பின் அடையாளம். பழங்களை கூடையில் பார்ப்பதைவிட தோட்டத்தில் பார்ப்பது தனியொரு அற்புத அனுபவம். இந்த அரசு பழப்பண்ணையில் பல்வேறு பழ வகைகள், நூற்றுக்கணக்கான செடி வகைகள் மற்றும் பல நறுமண மரங்களைக் காண முடியும். கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோயில் சாலையில் 2 கி.மீ. சென்றால் பழப்பண்ணையை அடையலாம். நேரம் காலை 9-11 மதியம் 1-3 மணி வரை. விடுமுறை சனி ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள்

                              திரிவேணி சங்கமம்
 முக்கடல் சங்கமம், வங்கக் கடல், அரபிக் கடல், இந்துமாக் கடல் என முக்கூடலும் சங்கமிக்கும் புனித நீர்த்தலம். குமரிக்குச் செல்கிறவர்கள் சங்கமத்தை தரிசிக்காமல் திரும்பக் கூடாது.


                      காட்சிக் கோபுரம் - தொலைநோக்ககம்
சமதளத்திலிருந்து கடலின் பிரமாண்டத்தையும், விவேகானந்தர் சிலை, வள்ளுவர் சிலையையும் பார்ப்பதில் அனுபவம் வேறுவிதம். ஆனால் காட்சிக் கோபுரத்தில் நின்றபடி தொலை நோக்கியில் பார்ப்பபது தனி ருசி. குமரிக் கடலின் அழகை சுற்றுப்புறக் காட்சிகளை இங்கின்றி வேறெங்கே பார்க்க போகிறீர்கள்?

                           சூரிய விழிப்பும், துயிலும்
வங்கக் கடலோரம் உதயமும், மறைவும் ஒரே இடத்தில் காணக் கூடிய கண்கொள்ளாக் காட்சி. சூரிய உதயத்தை வருடம் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். சூரிய மறைவை ஜுன் ஜுலை ஆகஸ்ட் மாதங்கள் தவிர்த்து மற்ற மாதங்கள் முழுவதும் காணலாம். இதற்கென்று அமைக்கப்பட்ட கோபுரம் மூலம் இக்காட்சிகளை மிகச் சிறப்பாகக் காண முடியும். இது நமக்காக இயற்கை வரைந்த எழில் ஓவியம்.

                             தமிழன்னை பூங்கா
தமிழ் வாழ்வின் பெருமையை நிலைநிறுத்தும் பூங்கா. தமிழன்னைக்குத் தனியாக உருவாக்கப்பட்ட ஒரே பூங்கா. இங்கு புலியை முறத்தால் தடுத்த வீரப்பெண், முல்லைக் கொடி படர தேர் ஈந்த பாரி வள்ளல் சிலைகள் உள்ளன. தமிழ்ப் புலவர்களின் ஓவியங்களும் உண்டு. தமிழுக்கு அமுதென்று பேர்.

                          அரசு அருங்காட்சியகம்
தென்னிந்திய கோயில்களின் கைவினை கலைபொருட்கள் தொகுத்து வைக்கப்பட்டுள்ள காட்சியகம். கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. குமரிக்குச் செல்லும் பயணிகள் இங்கும் ஒருமுறை சென்று வாருங்கள். புதியதொரு அனுபவத்தை உணர்வீர்கள்
Reactions:

About Author

Advertisement

Post a comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top