Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: பொதிகை மலை அகத்தியர் மலை ஒரு பயணம்... Agastya Mala Travel ...
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பொதிகை மலை அகத்தியர் மலை ஒரு பயணம்... Agastya Mala ..... பொதிகை மலை , கிட்டத்தட்ட இரண்டு வருஷமா plan பண்ணி பண்ணி போகமுடியாம போச்சு ,...
பொதிகை மலை அகத்தியர் மலை ஒரு பயணம்... Agastya Mala .....
பொதிகை மலை , கிட்டத்தட்ட இரண்டு வருஷமா plan பண்ணி பண்ணி போகமுடியாம போச்சு , மதுரைல இருந்து நான் நண்பர்கள் அடிக்கடி plan போடுவோம் ஆனா போக முடியாது , முதல் காரணம் அகத்திய பெருமானோட அருள் வேணும் அடுத்து அங்க போறதுக்கு சரியாய் வழிகாட்டி வேணும் , அது ஒரு அடர்ந்த காடு அப்பறம் தமிழ்நாடு வழி புலி சரணாலயமா இருகர்தால யார பாத்து எப்படி permission வாங்கரதுன்னு தெரியல .

அத மாதிரி எங்களுக்கு அகத்தியரோட அருள் பார்வை இரண்டு வருஷத்துக்கு அப்பறம் கிடைச்சது .

முதல்ல எப்படி அங்க போறது யார் கிட்ட permission வாங்கரதுன்னு சொல்லிடறேன் , ஏன்னா நான் எல்லாம் இந்த information கிடைக்கறதுக்கு கொஞ்சம் கஷ்டம் தான் பட்டேன் . கேக்கும்போதெல்லாம் இப்ப கிடையாது அப்போ போகணும் இவன பாக்கணும் அவன பாக்கணும் இவ்ளோ பணம் செலவாகும் அது இதுனு அழிச்சாட்டியம் பணிட்டாங்க .

இங்க போறதுக்கு சிறந்த வழி கேரளா வழி தான் , தமிழ் நாடு வழி வன விலங்குகள் அதிகம் , போற ஆட்கள் நிறைய பாதிக்கப்பட்டு இருக்காங்க , விஷயம் வெளிய வரல , காரணம் வன இலாகாவில் இருந்து யார் கிட்டயும் proper permission கிடையாது . கேரளா வழியும் சும்மா இல்ல ஜன நடமாட்டம் இவ்ளோ இருக்குற நாட்கள்லயே யானைகள் சாதரணமா வந்துட்டு போகுது , அதுவும் சரிதான் அது இடத்துக்கு தான நாம போறோம் . 
சரி விஷயத்துக்கு வருவோம் , கேரளா திருவனந்தபுரம்ல , forest and wild life அலுவலகம் P .T .P நகர்ல ( வட்டியூர் காவு ) இருக்கு , அங்க போய்ட்டு , "அகஸ்தியர் கூடம் " போறதுக்கு permission வாங்கனும்னு சொன்னா போதும் , நேரா அந்த ஆபீஸ் உயர் அதிகாரியான வார்டன் ன பாக்க சொல்லுவாங்க , அங்க இப்போ இருக்கிற வார்டன் பேரு "திரு. ஜெயகுமார் ஷர்மா" , ரொம்ப நேர்மையான officer , சல்லி காசு லஞ்சம் வாங்கறது இல்ல , சீசன் நேரத்துல permission கேட்டா , ஞாயமா இருந்ததுனா உடனே permission குடுத்திடுவாங்க ஒரு தலைக்கு ரூபாய் 350 /- . சீசன் நேரம் என்பது மகரஜோதி முதல் சிவராத்திரி வரை , ஒவ்வொரு நாளும் 100 பேருக்கு அனுமதி உள்ளது , சில நேரங்களில் , அத்தியாவசியமாகின் அல்லது முன்னரே பதிவு செய்தவர்கள் யாரவது cancel செய்யும் பட்சத்தில் நாம் முன்பதிவு செய்யலைனா கிடைக்கும் , முன் பதிவு ஜனவரில முதல் வாரத்துல ஆரம்பிக்குது . சிவராத்திரிக்கு அப்பறம் ஏப்ரல் மாசம் வரைக்கும் package trip மாதிரி ஒன்னு இருக்கு , அதுக்கு ஒரு தலைக்கு ரூபாய் 750 /- ஒரு குழுவிற்கு குறைந்த பட்சம் 4 நபர்கள் ஆக ரூபாய் 3000 /- செலுத்தி செல்லலாம் . எந்த விதமான லஞ்சத்திற்கும் அங்கே இடம் இல்லை , தேவையும் இல்லை , அந்த அலுவலகத்துல எனக்கு பிடிச்ச ஒன்னு யாரும் லஞ்சம் கேக்கறது இல்லை .

போன் மூலமா பேசறத விட நேரா போன அனுமதி கண்டிப்பாக கிடைக்கும் , செல்லும்போது ஒரு photo I .D . எடுத்துட்டு போங்க , விண்ணப்பம் இலவசம் .பொதிகை யாத்திரை செல்பவர்களுக்கு என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள் என்னனா , மார்ச் மாசம் முதல் அல்லது இரண்டாம் வாரதுக்குள்ள போய்ட்டு வந்துடுங்க , அதுக்கு அப்பறம் நான் கேள்வி பட்டது வரைக்கும் யானை நடமாட்டம் வெகு சாதாரணமா இருக்கும் , அவ்ளோ தூரம் களைப்புல ஏறும்போது நம்மால ஓடி ஒளிய கூட முடியாது .

கேரளா வனத்துறை விலாசம் :
forest and wildlife office
P .T .P NAGAR
VATTIYUR KAAVU
PH : 0471 - 2360762

அப்பறம் எப்படி பொதிகை ( அகஸ்தியர் கூடம் ) அடிவாரம் போறதுன்னு பாப்போம் .
அடிவாரம் வன இலாகா அலுவலகம் இருக்கும் இடம் பேர் போனக்காடு , திருவனந்தபுறத்துல இருந்து நெடுமங்காடு - விதுரா - போனகாடு பஸ் பிடிக்கணும் , காலை 6 மணிக்கு முதல் வண்டி அடுத்து அடுத்து இரண்டு மணி நேரத்துக்கு ஒரு வண்டி இருக்கு , அப்படி இல்லனா நாம நெடுமங்காடு போயிட்டு போகணும் , நேர் வண்டி கிடச்சதுனா 2 .30 மணி நேரத்துல அடிவாரம் போகலாம் , பஸ் நிக்கிற இடத்துல இருந்து 4 கிலோ மீட்டர் நடந்தா வன இலாகா அலுவலகம் வரும் .
  
                                              போனகாடு -  forest office, bonagad
அகத்தியர் வாழ்ந்து வரும், தென்றல் தவழ்ந்தோடும் பொதிகை மலையை, அகத்தியர் மலை என்றும் அழைக்கின்றனர். தமிழ் இலக்கணம், சித்த மருத்துவம், சோதிடம் ஆகியவற்றைப் படைத்து, சித்தர்களுக்கெல்லாம், தலையாய சித்தராக விளங்கும் தமிழ் முனிவர் அகத்தியரை, இறைவனாகவே சித்தர் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் வணங்கி வருகின்றனர்.
அகத்தியர் வாழும் இப்பொதிகை மலையில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரத்திலுள்ள அகத்தியரைத் தரிசிக்கச் செல்வதை புனிதப் பயணம் என்றும் சாகசப் பயணம் என்றும் கூறலாம்.

அபூர்வ மூலிகைகள், மனதைக் கவரும் அருவிகள், சிற்றோடைகள், ஆறுகள், எங்கு காணினும் இயற்கையின் கொடையான பசுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள், புல்வெளிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள இப்பொதிகை மலை இயற்கை நமக்கு அளித்த கொடை. 

இந்த அடர்ந்த காட்டில் சிறு அட்டை முதல் மான், காட்டெருமை, கரடி, சிறுத்தை, புலி, யானை, செந்நாய், பாம்பு, உடும்பு மற்றும் காடுகளில் உள்ள ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து வனவாழ் உயிரினங்களும் உள்ளன.கயிற்றின் துணையுடன்

கயிற்றின் துணையுடன்  தமிழ் முனிவரைத் தரிசிக்க கேரளத் தலைநகரான திருவனந்தபுரம் பி.டி.பி. நகரிலுள்ள வனவிலங்குக் காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவர்களது தகவலின் பேரில் போணக்காட்டிலுள்ள வனத் துறை சோதனை மையத்தில் பணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்று, போணக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடத்திலிருந்து, வனத் துறையினர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன்  மூன்று நாள் பொதிகை மலை பயணம் தொடங்குகிறது.

முதல் அரைமணிநேரப் பயணத்தில் நாம் முதலில் காண்பது விநாயகர் கோயிலை. அவரை வணங்கி நடைப்பயணம் தொடங்குகிறது. அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் கரமனையாறு அடைகிறோம். அடர்ந்த வனப்பகுதி இங்கிருந்துதான் தொடங்குகிறது.

இவ்வாறு மலை ஏற்றம், இறக்கம், சிற்றாறு, அருவிகள், புல்வெளி, அடர்ந்த வனம் ஆகிய வழிகளில் நடந்து, சுமார் 6 மணி நேர பயணத்தில் (நன்றாக நடைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரம் ஆகலாம்) அதிருமலை எஸ்டேட் என்ற இடத்தை அடைகிறோம்.

அங்கு கேரள வனத் துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்குகிறோம். குறுமுனிவரின் வழிபாட்டுக்குக் கொண்டு செல்லும் பூஜைப் பொருள்களை எடுத்துக் கொண்டு, அதிருமலையில் காவல் தெய்வமாக உள்ள தெய்வத்தை வணங்கிவிட்டு நடைப்பயணம் தொடங்குகிறது.
சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தை அடைகிறோம். அங்கு சிறிது நேரம் ஓய்வு, அங்குள்ள தென் பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவிட்டு (இது முற்றிலும் மூலிகை நீரைக் கொண்டது) மீண்டும் நடைப்பயணம். 15 நிமிட நடைப்பயணத்தில் தமிழக வனப் பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடத்தை அடைகிறோம்.
இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது. சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர். கேரளத்தினர் இப் பகுதியை "பொங்காலைப்பாறைஎன்று கூறுகின்றனர். கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது.

இச் சங்கு முத்திரை பகுதியின் மற்றொரு பள்ளத்தாக்கில் நமது வற்றாத ஜீவநதியாம், பொருநை என்று அழைக்கப்படும் தாமிரவருணி உற்பத்தி இடமான பூங்குளம் சுனை உள்ளது.
இந்த சங்கு முத்திரை பகுதியிலிருந்துதான் பொதிகை மலையை நோக்கிய மிகவும் செங்குத்தான பாதை தொடங்குகிறது. இப்பாதையில் பெரும் பகுதி பாறைகளாகவே காணப்படுகிறது. இச்சிகரத்தின் பாதி உயரம் வரை, இடது புறத்தின் மரங்கள் நிறைந்த மழைநீர் வழியும் சாய்வான பகுதி வழியே ஏறி சென்று, பின் வழித்தடங்கள் அற்ற பாறைகள் வழியே துன்பத்தைப் பொருள்படுத்தாது 
காலும், கையும் ஊன்றி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி, நாக்கு வறண்டு, பின் செங்குத்தான பகுதியில் கயிறு மற்றும் இரும்புக் கயிறு (ரோப்) பிடித்து கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடையலாம். 
அங்கு குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறு முனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையைத் தரிசிக்கும்போது, அந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்தத் தரிசனத்துக்குத்தான் நாம் இப்பிறவி எடுத்தோமோ என்ற நிலை நமக்கு ஏற்படும்.பனிபடர்ந்த அகத்தியர் மலை 
இந்த உச்சிப் பகுதியில் திடீர், திடீரென வெயிலும் சில நேரங்களில் உடலை நடுங்கச் செய்யும் பலத்த குளிர் காற்றும், சில நேரம் மழையும், சாரலும் ஏற்படும்.ஆனால் மலைப்பகுதிகளில் மெதுவாக வழிந்தோடும் சிற்றோடையில் குளிப்பது அற்புதமான அனுபவம். உடல் அதிகபட்சமாக தாங்கும் அளவிற்கான குளிர்ச்சி, சில்லிப்பு நீரில் உறைந்து ஊறி இருக்க..முழங்கால் அளவு நீரில் உடலை மூழ்கச் செய்ததும்.. சின்னச்சிறு லட்சக்கணக்கான ஊசிகள் உடலில் இருந்து வெளியேறுவது போன்ற உணர்வு தொடர்ந்து பல நிமிடங்களுக்கும் 
உணர்வுகளை மனம் எந்த முயற்சியும் இன்றி கவனிக்க ஆரம்பித்தது. தோலில் இருந்து உள்ளே எலும்பு வரை உள்ள தசைநார் கற்றைகளின் ஒவ்வொரு மில்லிமீட்டரும், ஒவ்வொரு அணுவும், தொடர்ந்து அதிர்வுகளை வெளிப்படுத்த ஆரம்பித்தது. அப்படி அதிர்வுகள் வெளியேற, வெளியேற மனமும் உடலும் ஒருசேர களைப்பு நீங்கி புத்துணர்ச்சி ஆவதை படிப்படியாக எளிதில் உணரவும் முடிந்தது. கண்ணை மூடி ஆனந்தமாக நீருக்குள் கிடந்தேன். கொஞ்சநேரம் ஆனதும் பழகிப்போனதாகவோ, மரத்துப்போனதாகவோ தெரியவில்லை.. நீரில் விழுந்த அந்த நொடிமுதல் பலநிமிடங்களும் இப்படியான உணர்வுகளே தொடர்ந்து நிலைத்து இருந்தது.
தொடர்ந்து மிகவும் கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, மூன்று மணி நேரப் பயணத்தில் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடைந்து அங்கு உணவருந்தி விட்டு, சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் இரவு 7 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும். அதன் பின் இரவு பொழுதை அங்கு கழித்துவிட்டு, மூன்றாம் நாள் காலையில் அதிருமலை காவல் தெய்வத்தையும், பொதிகை சிகரத்தையும் வணங்கிவிட்டு பயணம் தொடங்கி, சுமார் 5 மணி நேர நடைப்பயணத்துக்கு பின் போணக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பயணம் நிறைவு பெறுகிறது.
இம் மூன்று நாள் பயணத்தின்போது சுத்தமான காற்று, மூலிகை கலந்த நீர், செல்போன் தொந்தரவு இல்லாத வெளி உலகத் தொடர்பின்மை, பார்க்கும் இடங்கள் எல்லாம் மனதைக் கவரும் பசுமை வெளி ஆகியவற்றால் நமது உடலும், உள்ளமும் புத்துணர்வு பெற்றது என்றால் அது மிகையாகது. தமிழ் முனிவரைத் தரிசிக்க ஆண்டுதோறும் ஜனவரி 15 முதல் சிவராத்திரி வரை கேரளத்தவர்கள் தினமும் குழுவாக (நாள் ஒன்று சுமார் 200 பேர்) சென்று வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்ரல் மாதம் முதல் சென்று வருகின்றனர்.

1998-ம் ஆண்டு தமிழக வனத் துறை பொதிகை மலை செல்ல அனுமதி மறுத்து விட்டது. பின் பொதிகை மலை புனித யாத்திரைக் குழுவினர் மற்றும் பக்தர்களின் முயற்சியால், வனத் துறை சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999-ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது. இந்நிலையில், 2009-ல் தமிழக வனத் துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல அனுமதி மறுத்ததுடன், கேரளம் வழியாக செல்ல அறிவுறுத்தியது.

Reactions:

About Author

Advertisement

Post a comment Blogger Disqus

  1. Wonderful post with lovely unknown information. Thanks for sharing this wonderful post in this blog. It is a lovely place, this blog with amazing picture inspires people to visit those places. Make your way to these places by booking your bus tickets in advance in Universal Travels.

    ReplyDelete
  2. Such a awesome Post, thanks for sharing such a good post.I really got more think after seeing your post. Want to visit this places then book you bus tickets in advance in ">Universal Travels

    ReplyDelete

CLICK TO SELECT EMOTICON

 
Top