Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: பூலோக சொர்க்கம், உலகத்திலேயே சுத்தமான காற்று வீசும் நாடு பின்லாந்து - Finland
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பூலோக சொர்க்கம் , ஊழலே இல்லாத நாடு , உலகத்திலேயே சுத்தமான காற்று வீசும் நாடு , வடதுருவத்திற்கு அருகில் அமைந்துள்ள நாடு... இப்படி ஏக...பூலோக சொர்க்கம், ஊழலே இல்லாத நாடு, உலகத்திலேயே சுத்தமான காற்று வீசும் நாடு, வடதுருவத்திற்கு அருகில் அமைந்துள்ள நாடு... இப்படி ஏகப்பட்ட சிறப்பம்சங்களைப் பற்றி கேள்விப்பட்டதிலிருந்து பின்லாந்து போக வேண்டும் என்று ஆசையாக இருந்தது. என் இந்த ஆசை நிறைவேறும் வாய்ப்பும் கிடைத்தது!

வட அய்ரோப்பா கண்டத்தில் ஆர்டிக் பிரதேசத்தில் அமைந்துள்ள நாடு. அலுவலக பெயர் பின்லாந்து குடியரசு (Republic of Finland).
இதன் எல்லை நாடுகளாக ஸ்வீடன், நார்வே, இரஷ்யா போன்ற நாடுகளும், பின்லாந்து வளைகுடாவும், பால்டிக் கடலும் அமைந்துள்ளன.
இதன் பரப்பளவு 338,424 சதுர கிலோ மீட்டர்கள். பரப்பளவில் உலகில் 64ஆம் இடத்தை வகிக்கிறது.பின்லாந்தின் நில அமைப்பு முறை ஃபைன் வகைக் காடுகளாலும், மலைக் குன்றுகளாலும் பெருமளவு சூழப்பட்டுள்ளதாலும் ஏராளமான சிறிய, பெரிய ஏரிகள் அமைந்துள்ளதாலும் சிறந்த சுற்றுலாத் தளங்களைக் கொண்ட நாடாக விளங்குகிறது.

மிகப் பழமையான மற்றும் புதிய 37 தேசியப் பூங்காக்கள் பின்லாந்து வளைக்குடாவின் தென்பகுதியில் உள்ளன. பால்டிக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஹெல்சென், துர்கு, டால்லின் போன்ற நகரங்கள் குறிப்பிடத்தக்க சுற்றுலா நகரங்களாகும்.


                               uspenski cathedral inside
விமானம் மூலம் பின்லாந்து தலைநகரான ஹெல்சிங்கி சென்றடைந்தோம். மறுநாள் அந்த நகரைச் சுற்றிப் பார்த்தோம். பார்லிமென்ட் கட்டிடம், செனட் ஸ்குயர், உச்பென்சஸ்கி சர்ச், ராக் சர்ச், சிபெலஸ் நினைவிடம் என்று பல இடங்களைப் பார்த்தோம். ராக் சர்ச்சில் தமிழில் எழுதப்பட்ட வசனங்கள் அடங்கிய கைப்பிரதிகளைப் பார்த்தபோது அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வடிக்க இயலாது.

                                  uspenski cathedral
மாலை அங்கிருந்து ரயிலில் ஏறி இரவு முழுவதும் பயணித்து மறுநாள் காலை வடபகுதியில் உள்ள ரோவேய்னமி என்ற இடத்தை அடைந்தோம். மிகவும் இனிமையான பயணம் அது. இரு பக்கமும் பனி நிறைந்த இயற்கைக் காட்சிகள். ரோவேய்னமியில் முதல் நாள் அருகிலுள்ள ரேணுவா என்ற வனவிலங்குப் பூங்காவுக்குச் சென்றோம். துருவக் கரடி, பிரவுன் கரடி, ஓநாய், ஆர்க்டிக் நரி, விதவிதமான ஆந்தைகள், பருந்துகள் என்று பலவகையான விலங்குகளைப் பனிக் குவியலுக்கிடையில் கண்டுகளித்தோம்.


                           rock church helsinki finland
அடுத்த நாள் ஹஸ்கி வகை நாய்கள் மற்றும் ஒரு வகை கலைமான்களால் இழுக்கப்படும் ஸ்லெட்ஜ் வண்டியில் அமர்ந்து பனிக் குவியல் மேல் பயணித்தது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.

                                  santa claus village
மறுநாள் கெமி என்ற இடத்துக்குச் சென்று அங்கிருந்து பனிக்கட்டிகளை உடைத்துச் செல்லும் கப்பலில் உறைந்த கடலில் சென்ற அனுபவம் இந்த ஜென்மத்துக்குப் போதும். அந்தக் கப்பலில் குடித்த சூப்பின் சுவை இன்னும்கூட நாவில் இனிக்கிறது! நடுக்கடலில் கப்பல் நிறுத்தப்பட்டது. ஐஸ் கட்டிகளுக்கிடையில் நீந்தி மகிழும் வகையில் அதற்குரிய ஆடையைக் கொடுத்தார்கள். எங்கள் மகள், நான், அனைவரும் அந்தக் கடலில் நீந்தி மகிழ்ந்தோம்.


                                santa claus village
அடுத்த நாள் சாண்டாகிளாஸ் கிராமத்துக்குச் சென்று கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் போட்டோ எடுத்துக்கொண்டோம். அன்று மாலை ஐஸ் ஹோட்டலுக்குச் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு, இரவு முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட இக்ளூ ஹோட்டலில் தங்கினோம். சென்னை திரும்பிய பிறகும் பனியின் குளிர்ச்சி நினைவில் தங்கியிருக்கிறது.


                                  Ice hotel
இந்நாட்டின் பெரும்பான்மை பகுதி ஆர்டிக் வட்டத்திற்கு வடக்கே அமைந்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான ஏரிகளும், காடுகளும், தீவுகளும் மற்றும் சதுப்பு நிலம் கொண்ட நாடாக விளங்குகிறது. இந்நாட்டின் மிகப் பெரிய ஏரியான சைமா (Saimaa) அய்ரோப்பாக் கண்டத்தின் நான்காவது பெரிய ஏரியாகும்.


                                  Igloo hotel 
எண்ணிலடங்கா ஆறுகள் நாடு முழுவதும் ஓடுவதால் சதுப்பு நிலங்கள் ஏராளம் உள்ளன. நாட்டின் வடமேற்கு பகுதிகளில் மட்டுமே உயர்ந்த இடங்களில் மலைகள் அமைந்துள்ளன. வடபகுதியில் கடுமையான மற்றும் நீண்ட குளிர்கால நிலையுள்ளது. தென்பகுதியில் மிதமான காலநிலை நிலவுகிறது.

                                  suomenlinna finland
2015 அனுமான கணக்கெடுப்புப்படி இந்நாட்டினர் மொத்தம் 5,483,424 பேர். இவர்களில் பெரும்பான்மை மக்கள் ஃபின் இனத்தவர்கள். சாமி (லாப்) இன மக்களும் இருக்கிறார்கள். ஃபின்னிஷ் மற்றும் ஸ்வீடிஷ் ஆகியவை ஆட்சி மொழிகள். சிறுபான்மை சாமி மக்கள் ஃபின்னோ யூக்ரிக் மொழி பேசுகின்றனர்.
லூத்தரணிய மதமும் கிழக்கு பழமைவாத மதமும் உள்ளன.
மக்கள் தொகைப்படி இந்நாடு உலகின் 114ஆம் இடத்தையும், மக்கள் நெருக்க அடிப்படையில் உலகின் 201ஆவது இடத்தையும் வகிக்கிறது.


                            national museum of finland
இந்நாட்டின் முக்கியத் தொழில்கள் இரண்டு. ஒன்று உலோகத் தொழில். இன்னொன்று வனம் சார்ந்த தொழில். உலோகம் சார்தொழில்களில் கப்பல் கட்டுதல், கார் தொழிற்சாலைகள், எந்திரங்கள் உருவாக்கம், மின்னணுப் பொருட்கள் (Electronics) மற்றும் இரும்பு, தாமிர, குரோமிய உலோகங்களை உருவாக்குதல். உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டும் பல்வேறு நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன


                                    Finland girls
பின்லாந்தில் கி.மு.8000 ஆண்டு கற்காலத்திலேயே மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பின்னர் 12ஆம் நூற்றாண்டு முதல் 1809 வரை பின்லாந்து ஸ்வீடன் நாட்டின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. பின்னர் ரஷ்யப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்து 1917இல் விடுதலையை அறிவித்தது.


                                  Rack Music
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜிப் படைகளுடன் சேர்ந்து இரஷ்யாவைத் தாக்கியது. 1955இல் அய்.நா. உறுப்பு நாடானது.
இதன் தலைநகர்: ஹெல்சிங்கி.


Video Link 

Reactions:

About Author

Advertisement

Post a comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top