Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்) ராட்சச சூரியக்கடிகாரம் - jantar mantar jaipur samrat yantra
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
ஜந்தர் மந்தர் ( Jantar Mantar), 1727 மற்றும் 1734 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் , இரண்டாம் ஜெய்சிங் மஹாராஜா ( Jai Singh) என்னும...

ஜந்தர் மந்தர் (Jantar Mantar), 1727 மற்றும் 1734 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இரண்டாம் ஜெய்சிங் மஹாராஜா (Jai Singh) என்னும் அரசரால்,அவரது அப்போதைய தலை நகரான ஜெய்ப்பூர் நகரத்தில் கட்டமைக்கப்பட்ட வானவியற்கருவிகளின் தொகுப்பாகும். இது அப்போதைய மொகலாய தலைநகரான தில்லி யில் அவர் தமக்காக கட்டமைத்ததை ஒட்டி அமைக்கப்பட்டது. தில்லி மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களையும் சேர்த்து, இதைப் போன்று மொத்தமாக ஐந்து இடங்களில் அவர் இத்தகைய கட்டமைப்புக்களை நிறுவினார். இவை அனைத்திலும் ஜெய்ப்பூரில் உள்ள வான் ஆய்வுக்கூடமே மிகவும் பெரியதாகும்.


              இரண்டு ராட்சச சூரியக்கடிகாரங்களில் சிறியதன் காட்சி.
இப்பெயரானது ஜந்தர் ("கருவி") மற்றும் ("சூத்திரம் அல்லது, இந்த இடத்தில் கணிப்பு எனப் பொருள்படுவதான) மந்தர் ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிறது. இவ்வாறாக, ஜந்தர் மந்தர் என்பது 'கணிப்புக் கருவி' எனப் பொருள்படுவதாகிறது. இந்த வாய் ஆய்வுக்கூடத்திற்கு மதம் தொடர்பான முக்கியத்துவமும் உண்டு; காரணம், பண்டைய இந்திய வானவியலாளர்கள் சோதிட நிபுணர்களாகவும் இருந்தனர்.சாம்ராட் இயந்திரத்தின் (ராட்சச சூரியக்கடிகாரம்) அருகில் வான் ஆய்வுத் தளம்.
நேரத்தைக் கணக்கிடுவது, கிரகணங்களை முன்னறிவிப்பது, கதிரவனைச் சுற்றும் புவியின் பாதையில் விண்மீன்களின் இடத்தைத் தடமறிவது, கோள்களின் சாய்மானங்களை அறிவது மற்றும் கோள்களின் கோணவேற்றங்களை அறிவது மற்றும் அவை தொடர்பான இட அட்டவணைகள் போன்றவற்றிற்காக மாபெரும் வடிவவியற் கருவிகளை இந்த வான் ஆய்வுக்கூடம் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் நிலத்தில் பதிக்கப்பட்ட மற்றும் 'குவிமையப்படுத்தும் கருவி'யாகும். மிகப்பெரும் கருவியான சாம்ராட் இயந்திரம் 90 feet (27 m) உயரம் கொண்டு, அதன் நிழல் ஒரு நாளின் நேரத்தை மிகத் துல்லியமாக அறிவிக்கும் முறையில் அமைந்துள்ளது. அதன் முகப்புறம் ஜெய்ப்பூர் நகரின் அட்சக்கோடான 27 அலகுக் கோணமாக அமைந்துள்ளது. அதன் உச்சியில் உள்ள இந்து சத்திரி (சிறிய விதானம்) கிரகணங்கள் மற்றும் பருவகாலங்களை அறிவிக்கப் பயன்படுகிறது.உள்ளூர்ப் பகுதியில் கிடைக்கும் கல் மற்றும் பளிங்கைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கருவியும், பொதுவாகப் பளிங்கின் உட்புறம் குறித்துள்ள, வான் ஆய்வு வரையறை அளவைக் கொண்டுள்ளது. மிகத் துல்லியமாக அமைந்த வெண்கல வில்லைகளும் பயன்படுத்தப்பட்டன. 1901ஆம் ஆண்டு முழுவதுமாக மறு சீரமைக்கப்பட்ட ஜந்தர் மந்தர் 1948ஆம் ஆண்டு ஒரு தேசியச் நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.ஜெய் சிங்கின் ஜந்தர் மந்தரின் ஊடாகச் செல்லும் ஒரு சுற்றுலா, திண்மையான வடிவவியற் கருவிகளின் ஊடாக நடந்து சென்று, வானுலகை ஆய்வதற்கான வடிவமைக்கப்பட்ட ஒரு வான் ஆய்வுத் தொகுப்பை அறியும் தனித்துவமான ஒரு அனுபவமாகும்.

சாம்ராட் இயந்திரம் எனப்படும் ராட்சச சூரியக் கடியாரம் (உச்சக் கருவி) உலகிலேயே மிகப் பெரிதான சூரியக்கடியாரமாக 27 அடி உயரத்தில் நிற்கிறது. பார்வைக்கு இதன் நிழல் ஒரு நொடிக்கு 1 மில்லி மீட்டர் அல்லது ஒரு நிமிடத்திற்கு கையின் பரப்பளவு (ஆறு செண்டிமீட்டர்) அளவு நகர்கிறது. பார்வையாளர்கள் பலருக்கும் இது பரவசமான அனுபவமாகும். 

                 இரண்டு ராட்சச சூரியக்கடிகாரங்களில் பெரிய காட்சி.
இன்று, இந்த வான் ஆய்வுக்கூடம் புகழ் வாய்ந்து, சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இருப்பினும், உள்ளூர் வானவியலாளர்கள், அவர்களது இத்தகைய அதிகாரம் கேள்விக்குறியதாக இருப்பினும், உழவர்களுக்குப் பருவ நிலையை முன்னறிவிக்க இன்னமும் இதனைப் பயன்படுத்துகின்றனர். வானவியல் மற்றும் வேத காலத்து சோதிடவியல் மாணவர்கள் இந்த ஆய்வுக் கூடத்தில் சில பாடங்களைக் கற்கிறார்கள். வேத உரைகளைத் தவிர, வேத காலத்து கருத்தாக்கத்தின் இன்னமும் நடப்பில் இருப்பதான ஒரே மாதிரிக் கட்டமைப்பு என்றும் இந்த வான் ஆய்வுக் கூடத்தினைக் கூறலாம். இராம் இயந்திரம் போன்ற சிறிய கருவிகள் பலவும் குறிப்பிடத்தக்க அளவில் கட்டமைப்பு வடிவமைப்பு புதுமை மற்றும் செய்முறை ஆகியவற்றில் புதுமையைப் பறை சாற்றுகின்றன

Subash
Reactions:

About Author

Advertisement

Post a comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top