Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: உடலைப் பற்றி குழந்தைகளுக்குத் தெளிவாகக் கற்றுத் தருவோமா!
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
வாழப்பழ மேனி! வைகாசி மாங்கனியே! கொய்யாப் பழ மேனி!  நான் பெத்த கொஞ்சி வரும் ரஞ்சிதமே! கொவ்வை இதழ் மகளே   என் ...
வாழப்பழ மேனி!

வைகாசி மாங்கனியே!

கொய்யாப் பழ மேனி! 

நான் பெத்த

கொஞ்சி வரும் ரஞ்சிதமே!
கொவ்வை இதழ் மகளே  
என் குவிந்த நவரத்தினமே
கட்டிப் பசும்பொன்னே  
என் கண்மணியே 
கண் வளராய்!
தாலாட்டு பாடல்களில் குழந்தையின் மேனியை தாய் வர்ணிக்கும் காட்சி இது. தொட்டால் கனியும் பழங்களைப் போன்று மிருதுவானதும், விலைமதிப்பில்லாத ரத்தினங்களைப் போன்றதுமான உடலைப் பற்றி குழந்தைகளுக்குத் தெளிவாகக் கற்றுத் தருவோமா!
நம் கலாசாரம் பிறப்புறுப்புகளை செல்லப்பெயர் வைத்தே, குழந்தைகளிடம் அடையாளம் காட்ட சொல்லித் தருகிறது. குறிப்பிட்ட வயது வரை அது சரியானதே. அதன்பிறகு அறிவியல் பூர்வமாக அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட வயது என்பது எது? பிறந்த குழந்தையை பால்குடி மறக்கும் முன்பே பள்ளியில் தள்ளுகிறோம். பள்ளிக்குப் போவதற்கு முன் தெரிந்து கொள்வதுதானே முறை?

குழந்தைகளின் பிரைவேட் பகுதிகள் அவர்களுக்கானது மட்டும் என்று பள்ளி செல்லும் முன்பே சொல்லித்தர வேண்டும். உங்களோடு எப்போது அவர்கள் பேசத் தொடங்குகிறார்களோ அப்போதே அறிமுகப்படுத்துங்கள். முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது கலவரப்படுத்தாமல், பயமுறுத்தாமல் அறிமுகம் செய்ய நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

‘பாப்பாவை அம்மா மட்டும்தான் குளிக்க வைப்பேனாம்... இல்லைன்னா பாட்டி (அல்லது யார் செய்வார்களோ அவர்கள்)... இந்த இடமெல்லாம் அம்மா தேய்ப்பேனாம்... இதெல்லாம் நீ தேய்ச்சுக்கணுமாம்’ என்று விளையாட்டுப் போக்கிலேயே சொல்லிக் கொடுங்கள். சிறுவயதில் சொல்வது மனதில் நன்றாக பதியும். அதே நேரம் எவ்வளவு கவனமாக பிறப்புறுப்புகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துவது எப்பருவத்துக்கும் உதவும்.

முக்கியமான ‘சேஃப்டி ரூல்ஸ்  &   செல்ஃப் கேர்’ பற்றி கொஞ்சம் விவாதிக்கலாம்.  சேஃப்டி ரூல்ஸ் என்பது குழந்தைகளின் உடல் பற்றிய பாதுகாப்பு விதிகள். முக்கியமான 3 விதிகளை 3ம் வயதிலேயே தொடங்க வேண்டும். 


1. உடல் உறுப்புகளை சரியான பெயரில் அறிமுகப்படுத்துதல்... 
‘குச்சா, ஜிங்கு, சூச்சு, உச்சா’ போன்று பெயர்களை விடுத்து, சரியான பெயரில் அறிமுகப்படுத்துவதால், வேறு எங்கேனும் குழந்தைகளை அந்தப் பகுதிகளில் யாரேனும் தொட்டாலோ, தொந்தரவு செய்தாலோ, மற்றவர்களுக்குப் புரியும் வகையில் குழந்தைகளால் சொல்ல முடியும். அவசர உதவி தேவைப்படும் நேரங்களில் நமக்குத் தெரிந்த பெயர்களை மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதே? பள்ளியிலும் அவசரமாக கழிப்பிடம் செல்ல இப்படிச் சொல்லி அங்கு 
இருப்பவர்களுக்குப் புரிவது போன்ற சிறிய விஷயங்களுக்கும் இது உதவும். 


2. உன் உடல் உன்னுடையதே... நீ மட்டுமே அதற்கு பாஸ்...  
குழந்தையின் உடல் குழந்தைக்கு மட்டுமே சொந்தம். யார், எங்கு, எப்போது தொடலாம் என்பதை குழந்தையே தீர்மானிக்க வேண்டும். வளர்ச்சியடைந்த நாடுகளில், குறிப்பிட்ட வயதுக்கு மேல் அம்மா, அப்பாகூட தொட அனுமதிப்பதில்லை. நாமும் அதை கடைப்பிடிக்கலாம். சில குழந்தைகள் தொட்டுப் பேசுவதையே விரும்ப மாட்டார்கள். ஆனாலும், அடுத்தவர்கள் தொடும்போது சொல்லத் தயங்குவார்கள். அந்த தயக்கத்தை களைவதே ‘உடலுக்கு நீதான் பாஸ்’ என்கிற புரிய வைத்தல். குழந்தை விரும்பவில்லை என்றால், அது யாராக இருந்தாலும் தொட உரிமை இல்லை. குழந்தை விரும்பாததை உடனே சொல்ல வைக்க பழக்கப்படுத்துதல் பெற்றோர் கடமையே. ‘பாரு செல்லம்... உனக்கு அந்த ஆன்ட்டி தொட்டுப் பேசறது பிடிக்கலைன்னா நீ தாராளமா சொல்லலாம்... சொல்லாம கஷ்டப்படாதே’  என அவர்களுக்குத் தைரியம் அளித்தல் அவசியம். குறைந்தபட்சம் அங்கிருந்து விலகி விட வேண்டும் என்றாவது புரிய வைக்க வேண்டும்.
எல்லா நேரமும் ‘யெஸ்’ சொல்ல வேண்டியதில்லை... குழந்தைகளுக்கு ‘நோ’ சொல்லவும் கற்றுக்கொடுக்க வேண்டும். பிடிக்காத ஒன்றை தொடர்ந்து ஒரு குழந்தை அனுபவிக்கும் போது மனரீதியாகப் பாதிப்பும் பதற்றமும் ஏற்படும். அது மற்ற வேலைகளை வெகுவாகப் பாதிக்கும்... கவனக்குறைவை உண்டாக்கும். தொடுதல் அல்லது யாரேனும் எதையேனும் கொடுக்கும் போது விருப்பம் இல்லாவிட்டால் தயவுதாட்சண்யம் இன்றி ‘நோ’ சொல்ல பழக்குங்கள். அடுத்தவர்களுக்காக உங்கள் குழந்தை அவஸ்தைப்பட வேண்டுமா? ‘நோ’ என்பது ‘யெஸ்’ சொல்வதைக் காட்டிலும் எளிதே!

3. தொடுதல் பற்றிய விழிப்புணர்வு...  
குழந்தைகளுக்குத் தொடுதல் பற்றி அறிவுறுத்த வயது வரம்பு கிடையாது. நீங்கள் கூறுவதை உங்கள் குழந்தை எப்போது புரிந்து கொள்கிறதோ அதுவே சரியான வயது. 
தொடுதலில் 3 வகை உண்டு... பாதுகாப்பான (சேஃப்டி) டச், பாதுகாப்பற்ற (அன் சேஃப்டி) டச், விரும்பாத, தேவையில்லாத (அன்வாண்டட்) டச்.

சேஃப்டி டச்... 
பாராட்டும் விதமான அணைப்பு, தோளில் தட்டிக் கொடுத்தல், முதுகில் தட்டுதல், ‘ஹை ஃபைவ்’ போன்றவை சேஃப்டி டச். இவை குழந்தைகள் விரும்பும் வகையில் மென்மையாக இருக்கும். சில நேரம் வலியுடன் கூட இருக்கும். உதாரணமாக ஏதேனும் ஒரு பொருளால் காயம் பட்டால், அதனை அகற்ற யாராவது ஒருவர் தொட வேண்டி இருக்கும் அல்லவா? இப்படி அவசியமான, பாதுகாப்பான தொடுதலே சேஃப்டி டச்.

அன்சேஃப்டி டச்...  
தள்ளிவிடுதல், கிள்ளுதல், உதைத்தல் & இப்படி எது குழந்தைகளை உடல்ரீதியாவும் மனரீதியாகவும் பாதிக்கிறதோ அனைத்துமே பாதுகாப்பற்ற தொடுதல்தான். 

அன்வாண்டட் டச்... 
தேவையானதாக இருந்தாலும் குழந்தைகள் விரும்பாதவரை, அது தேவையற்ற தொடுதலே. உறவினரோ, பிறரோ & அவர்களின் தொடுதலை குழந்தைகள் விரும்பாவிட்டால் அது அன்வாண்டட் டச். இச்சூழலில்தான் நாம் பழக்கிய ‘நோ’ குழந்தைகளுக்கு உதவும். உறுதியாகவும் அதே நேரம் பணிவாகவும் ‘நோ’ சொல்லத் தெரிந்தால் பாதி பிரச்னை தீரும்!
(பாதுகாப்போம்...)

உன் உடலை நீ அறிவாய்!
ஒவ்வொருவருக்கும் மார்புகளின் அளவு வேறுபடும். மார்புகள் வளரும்போது லேசாக வலியும் இருக்கும்... பயப்பட வேண்டாம். மார்பு கொழுப்புகளால் ஆனது... நிப்பிள் என்கிற அதன் காம்பு பல நரம்புகளின் தொகுப்பால் ஆனது. அதனால் அதில் கூடுதல் வலி ஏற்படக்கூடும். சில நேரம் ஒரு நிப்பிள் உள்ளடங்கி இருக்கும்... ஒரு நிப்பிள் வெளியில் இருக்கும். இதுவும் சாதாரணமானது. உன் உடல் திடீரென மாற்றம் அடையும்போது இதெல்லாமே சகஜம். மார்பின் ஓரங்களில் கோடு கோடாக வரும். சருமம் பெரிதாவதாலும், அதன் எலாஸ்டிக் தன்மை குறைவாக இருப்பதாலும்தான் இந்தக் கோடுகள் ஏற்படுகின்றன. 

இது பொதுவாக எல்லா பெண்களுக்குமே இருக்கும். இதையே ‘ஸ்ட்ரெச் மார்க்’ என்கிறார்கள். இது காலப்போக்கில் சரியாகி விடும். அம்மாவிடம் நல்லெண்ணெய் லேசாக வெப்பப்படுத்தித் தரச் சொல்லி, குளிக்கும் முன் உடலில் தேய்க்கலாம். இதனால் உடலில் எண்ணெய்ப்பசை சீராக இருக்கும். மாய்ச்சரைஸ் ஆக இல்லாவிட்டால் தான், உலர்வுத் தன்மை ஏற்பட்டு, கோடுகள் வரும். எப்படி ஒரு மார்பு போல இன்னொன்று இல்லையோ, அதே போலத்தான் இதுவும். நிப்பிளில் சில நேரம் ஒரு திரவம்... ஏன் கொஞ்சூண்டு ரத்தம்  கூட வரலாம்... நிப்பிள் வெளியில் வந்து உன் உடையில் உரசிக் கொண்டே இருப்பதாலும் இது நேரலாம். பீரியட்ஸ் இல்லாத போதும் அதிக வலி இருந்தால் டாக்டரிடம் கேட்க தயங்க வேண்டாம்!

நன்றி!!!

Reactions:

About Author

Advertisement

Post a comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top