Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: மெனோபாஸ்.(Menopause). .
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
மெனோபாஸ்.( Menopause). . ஆண்களுக்கு மட்டும்  45 வயதுக்கு மேல் ஆன உங்க மனைவியிடமோ அல்லது உங்க அ...... ஒரு திடீர் மாற்றத்தை காண்கி...

மெனோபாஸ்.(Menopause). .

ஆண்களுக்கு மட்டும் 
45 வயதுக்கு மேல் ஆன உங்க மனைவியிடமோ
அல்லது உங்க அ...... ஒரு திடீர் மாற்றத்தை காண்கிறீர்களா?..
ரொம்ப எரிஞ்சு எரிஞ்சு விழறாங்க..
முன்பு எல்லாம் சாதுவா இருப்பாங்க..இப்ப ரொம்ப கோவ படறாங்க
ஒரு சின்ன விஷயத்துக் க்கெல்லாம் கத்தறாங்க..பேசவே பிடிக்கல
ரொம்ப சோம்பேறியாயிட்டாஎப்டி வேலை செய்வா இப்ப எப்ப பார்த்தாலும் மூதேவியாட்டம் படுத்துகிட்டே இருக்கா
 

இப்படி ஒரு சில குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறீர்களா?
 
கொஞ்சம் ரிலாக்ஸ் ..!அவங்க மெனோபாஸ் பீரியட்ல இருக்காங்க..!

அவங்க உடம்புல பல விதமான ஹார்மோன்கள் படுத்தும் பாடின் வெளிப்பாடுதான் இந்த மாதிரியான கோபங்களும் எரிச்சல்களும்..பல பெண்களுக்கே தெரியாமல் அவஸ்தையுடன் அவர்கள் கடக்கும் பருவம் தான் இந்த மெனோபாஸ் பருவம்.
 

மெனோபாஸ் பருவம்னா என்னன்னு கேட்கறீங்களா?
 

பெண்களுக்கு மாத விடாய் அதாவது பீரியட்ஸ் நிற்கும் பருவம் தான் இந்த மெனோபாஸ்..

ஒரு பெண்ணுக்கு வயதுக்கு வருவதும்,திருமணமும் குழந்தைப் பிறப்பும் எவ்வளவு முக்கியமோ அது போல் இந்த மெனோபாஸும் முக்கியமானதொரு நிகழ்வுன்னே சொல்லலாம்..இது சும்மா ஒரு நாள் திடீர்னு நின்னுடாது..ஆறுமாசமோ அல்லது ஒரு வருஷமோ அல்லது சில வருஷங்களோ அவளப் பாடாப் படுத்திவிட்டு தான் அவ உடம்பை விட்டு செல்லும்..

அவளோட ஓவரியில் ஹார்மோன்கள் உற்பத்தி குறைவதாலோ அல்லது தீர்ந்து போவதாலோ ஏற்படும் பிரச்சனைகளால் இந்த பருவத்தில் அந்த பெண்மனி உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப் படுகிறாள்..

ஹாட் ஃப்லஷ்…: உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை வெப்பம் பரவுதல் போல ஒரு உணர்வு..எவ்ளோ அவஸ்தை…!..இது நார்மல் சிம்படம் தான் ஐஸ் வெச்சுக்கோங்க கோல்ட் க்ரீம் தடவுங்கன்னு எளிதா டாக்டர்
 
அறிவுரை சொல்லிடுவாரு..ஆனா அவங்க அனுபவிக்கும் வலி கொடூரமானது.. வேலைக்கு சென்றும்,வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டும் இந்த வலியைக் கடந்து செல்கிறார்கள் பல பெண்கள்..

வியர்வை : கண்ணா பின்னான்னு வியர்த்து கொட்டும்..A/C ஆஃபிஸ் ல உட்கார்ந்து வேலை செய்யும் போதும் வியர்த்துக் கொட்டும்.. நாலு பேர் வந்து போற ஆஃபிஸ் ல இப்படி வியர்த்துக் கொட்டினால் அவங்களுக்கு எவ்ளோ மன உளைச்சலா இருக்கும்? ..!

மாதவிடாய் காலம் முன்னும் பின்னும் சரியாக மதிப்பிட முடியாமல் கண்ட நேரத்தில் கொட்டி தீர்க்கும்..சில பெண்கள் பிரசவ வலியை விட கொடுமையான வலியை அனுபவிப்பார்கள்..அதீத ரத்தப் போக்கு.. யாரையும் பிடிக்காது. எரிச்சலும் சிடுசிடுப்பும் கோபமும் அளவுக்கு அதிகமாகத் தலைகாட்டும். எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருக்க வேண்டும்போல சோம்பலாக இருக்கும். மனதும் சோர்ந்துபோய், சாப்பிட, டி.வி. பார்க்க, அலங்காரம் செய்ய என எந்த விஷயங்களிலும் ஈடுபாடு இருக்காது. அதுவரை வெகு விருப்பமாக செய்துவந்த வேலைகள்மீதுகூட வெறுப்பு வரும். இதனால் தலைவலி, தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வுகள் தோன்றும். மறதி அதிகமாகும். தூக்கம் வராது. எடை கூடும். அடிக்கடி மார்பு படபடப்பு வந்துபோகும். ஒரு காரணமும் இல்லாமல் வெடித்து அழத் தோன்றும்.
இந்த அவஸ்தைகளை புரிந்து கொள்ளாமல் கணவனும் குடும்பத்தாரும் அவளிடம் எதிர்பார்க்கும் போது அவள் இன்னும் கோபத்திற்கு ஆளாகி தாறு மாறாக பேசுகிறாள் நடந்து கொள்கிறாள் இயலாமையில் எரிஞ்சு விழுகிறாள்..காரணமே இல்லாமல் அழுகிறாள்..
மேலும் மாதவிடாய் நிற்பதை தன் இளமையே போய் விடுகிறது..தான் இனி எதற்கும் பிரயோசனம் இல்லை,தாம்பத்ய இன்பத்தை தன் கணவனுக்கு தன்னால தர முடியாது என்ற தவறான மனக் குழப்பத்தில் தன்னம்பிக்கை இழக்கிறாள்..இந்த கால கட்டத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் பிரிந்த தம்பதியர் கூட உண்டு.. இந்த நேரத்தில் அந்தத் பெண்மனிக்குத் தேவைப் படுவதெல்லாம் குடும்ப உறுப்பினர்களின் அக்கறை யும் ஆறுதலும் சரியான சிகிச்சையும்தான். ஆனால், பெரும்பாலான வீடுகளில் அது அவர்களுக்குக் கிடைப்பதில்லை..'

.இந்த காலகட்டம் எப்பேற்பட்ட தெளிவான ஆட்களையும் ஆட்டி படைக்கும் கால கட்டம்
பிரச்சனையை முன்பே தெரிந்து, தெளிந்து இருந்தால் தலைவலி, பல்வலியைப் போல இந்தக் குழப்பங்களையும் மிகச் சுலபமாகக் கடந்துவிடலாம்.

ஆக இங்குள்ள அனைத்து ஆண் தோழமைகளையும் தாழ்மையாக கேட்டு கொள்கிறேன்..
MENsturation காலகட்டம் முடிந்து MENopause கால கட்டத்தை சிறப்பாகக் கடக்க
 MENtal Strength தந்து உங்க வீட்டு பெண்மனிகளை அன்போடும், ஆதரவோடும், கனிவான பேச்சாலும், அரவணைத்து உதவுங்கள்

நன்றி!!!Reactions:

About Author

Advertisement

Post a comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top